ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள்.

தமிழ் மைந்தன்
0


ஹாரியட் ஜேகப்ஸ் எழுதிய ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள் என்ற இந்த நூலை நான் சமீபத்தில் வாசித்தபோது, அது சாதாரண வாழ்க்கை வரலாறு அல்ல, ஒரு மனிதக் குரல், ஒரு பெண்ணின் உள்நிலைச் சாட்சியம் என்பதை உணர்ந்தேன்.


இந்த நூலில் ஹாரியட் ஜேகப்ஸ் தனது அடிமைப் பெண்ணாக இருந்த காலத்தில் சந்தித்த துன்பங்கள், அடக்குமுறைகள், பாலியல் சுரண்டல்கள் ஆகியவற்றை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். பெண்கள் அடிமைத்தனத்தின் சுமையை இரட்டைச் சுமையாக — சமூக அடிமைத்தனமும், ஆண் ஆதிக்கத்தின் அடிமைத்தனமும் — சுமந்திருக்க வேண்டியிருந்தது என்பதை அவர் எழுத்துகள் நம்மை உணர்த்துகின்றன.

இது வெறும் வரலாற்று பதிவு அல்ல, பெண்ணியக் குரலாகவும், மனித உரிமை குரலாகவும் ஒலிக்கிறது. அந்தக் காலத்தில் ஒருவர் இத்தனை திறம்பட தனது அனுபவங்களை வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த தைரியம். இந்த நூல் வாசிக்கும் போதெல்லாம், அடிமைத்தனம் என்ற கொடுமையின் ஆழத்தை மட்டும் அல்லாமல், பெண்கள் சந்தித்த அநீதி எவ்வளவு கடுமையானது என்பதையும் நான் உணர்ந்தேன்.

தமிழில் கமலா கிருஷ்ணமூர்த்தி, அ.சங்கரசுப்பிரமணியன், மு.சுதங்கிரமுத்து ஆகியோர் மொழிபெயர்த்திருப்பதால், அந்த உணர்ச்சிகள், வேதனைகள், எழுச்சிகள் அனைத்தும் நம்மிடம் நெருக்கமாக வந்து இருக்கின்றன.

மொத்தத்தில், இந்த நூல் என்னுள் ஒரு கேள்வியை எழுப்புகிறது: "இன்றும் சமூகத்தில் அடக்குமுறைகளின் புதிய வடிவங்கள் எத்தனை இருக்கின்றன? நாம் அவற்றுக்கு எதிராக எவ்வளவு சத்தம் எழுப்புகிறோம்?"

எனவே, இது வெறும் அடிமைத்தன வரலாறு மட்டும் அல்ல, இன்றைய சமுதாயத்தையும் சிந்திக்க வைக்கும் காலத்தைக் கடந்து நிற்கும் நூல் என்று நான் கருதுகிறேன்.



நூலின் கதை சுருக்கம்

  ஹேரியட் ஆன் ஜேகப்ஸ் (Harriet Ann Jacobs) 1813இல் ஈடென்டெல்லில் அடிமையாகப் பிறந்தார். இவரது தாய் டெலைலா தந்தை எலிஜா. ஹேரியட்டும் தம்பி ஜானும் அவர்களுடைய பெற்றோர்களால் தாங்கள் அடிமைகள் என்ற எண்ணம் ஏற்படாதவாறு பாதுகாப்பாக வளர்க்கப்பட்டனர். அதனால் ஹேரியட்டின் குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாகவே கழிந்தது. ஹேரியட்டுக்கு ஆறு வயதாகும்போது அவரது தாய் டிலைலா மறைந்தார். அதன் பின் இச்சிறுமி தன் தாயின் எஜமானியான மார்க்கரெட் ஹார்னி ப்ளோ வீட்டில் வசித்தார். அந்த எஜமானி ஹேரியட்டுக்கு எழுதப் படிக்கக் கற்றுத்தந்தார். மார்க்கரெட் இறந்தவுடன் அவள் எழுதிவைத்திருந்த உயிலின்படி ஹேரியட், ஜேம்ஸ் நார்காம் என்பவரது வீட்டில் அவரது மூன்று வயது மகளுடைய அடிமையாக வசிக்க நேர்ந்தது. அப்போது ஹேரியட்டுக்குப் பன்னிரண்டு வயது. ஜேம்ஸ் நார்காம் இச்சிறுமிக்கு அவளது பதின்பருவம் முழுவதும் பாலியல் அச்சுறுத்தல்கள் கொடுத்துக்கொண்டே இருந்த கொடூரன். ஹேரியட் தனது பதினாறாம் வயதில் தனது அண்டை வீட்டுக்காரரும் பிற்காலத்தில் அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினராக ஆனவருமான சாமுவேல் ட்ரெட்வெல் சாயர் (Samuel Tredwell Sawyer) न மெட்டில்டா லூயிஸ் (Matilda Louise), ஜோசப் (Joseph) என இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். சாயர் தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் நார்காமிடமிருந்து பணம் கொடுத்து விடுதலை பெற்றுத் தந்துவிட, ஹேரியட் காற்றோ ஒளியோ புகாத, தவழ மட்டுமே முடிகிற தன் பாட்டி வீட்டுப் பரணில் ஒளிந்துகொண்டு மறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பாட்டி வீட்டில் வளரும் தன் குழந்தைகளைப் பரணில் இருந்த சிறு துளை வழியே பார்த்துக்கொண்டும் அத்துளை வழியே வரும் சிறிதளவு வெளிச்சத்தில் படித்துக்கொண்டும் தைத்துக்கொண்டும் ஏழு ஆண்டுகளைக் கழித்தார்.

1842இல் வடஅமெரிக்க மாகாணத்திற்குத் தப்பிச் சென்றார். நார்காம் தனது அடிமையைப் பிடித்துத்தர அனுப்பியவர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சியின்போது பாஸ்டனிலும் பின்பு நியூயார்க் நகரத்து ராச்செஸ்டரிலும் தனது தம்பி ஜானுடன் இணைந்து அடிமை முறை ஒழிப்புப் பணியில் ஹேரியட் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அக்காலத்தில் அனைவருக்கும் மிகவும் அறிமுகமாயிருந்த ஆமி போஸ்ட் என்ற அடிமை ஒழிப்புப் போராளி தந்த ஊக்கத்தால் ஹேரியட், தான் ஓர் அடிமையாகப் பாலியல் வன்கொடுமைகளை எதிர்கொண்டதைப் பற்றி எழுதத் தொடங்கினார். முதலில் இவரது எழுத்துக்கள் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படாத கடிதங்களாக நியூயார்க் ட்ரிப்யூனல் (Newyork Tribunal) என்ற செய்தித்தாளில் வெளியிடப்பட்டன. அதன் பின் ஹேரியட் தனது எழுத்துக்களை 1861இல் 'ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள்' ('Incidents in the Life of a Slave Girl) नए एक अफ्रीक நாட்டிலும் 'ஆழமான குற்றங்கள்' ('The Deeper Wrong') என்ற பெயரில் இங்கிலாந்திலும் வெளியிட்டார். தனது அடிமை வாழ்க்கையைப் பற்றி தானே எழுதிய முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இவரே.

அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்த பின் ஹேரியட்டும் அவரது மகளும் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவில் கறுப்பினத்தவருக்கான இலவசப் பள்ளியை நிறுவினர். ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள சவான்னாவிலும் விடுதலை பெற்ற கறுப்பினத்தவருக்கென்று தங்கும் விடுதியும் பள்ளியும் நிறுவினர். தனது இத்தகைய அனுபவங்களை எல்லாம் அவர் வடஅமெரிக்கச் செய்தித்தாள்களில் எழுதினார். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலம்வரை மறுபதிப்பை காணாத அவரது புத்தகம், அமெரிக்காவில் சிவில் உரிமைப் போராட்டங்கள் தீவிரமடைந்த பிறகு புதிய வாசகர் தளத்தைப் பெற்றது. ஹேரியட் வாஷிங்டனில் 1897ஆம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் கேம்பரிட்ஜ் நகரில் உள்ள மௌண்ட் ஆபார்ன் கல்லறைத் தோட்டத்தில் இருந்த அவரது தம்பி ஜானின் கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்டது.


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!